தச்சங்குறிச்சி

இன்று தச்சங்குறிச்சியில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி  உள்ளது.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தச்சங்குறிச்சியில் அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.

இன்று 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது . இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் பங்கேற்றுள்ளன.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டது.

போட்டியில் காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொள்கின்றன.