சென்னை

இன்று ஒரு நாளில் மட்டும் சென்னைவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 15690 பார்வையாளர் வருகை தந்துள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா ஆகும்.   இந்த பூங்காவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூ ங்கா என அழைக்கப்படுகிறது.

இங்கு வழக்கமாக உயிரியல் பூங்காவில் காணப்படும் விலங்குகளும் ஏராளமான அரிய வகை விலங்குகளும் உள்ளன.   எனவே. உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று  உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 15 ஆயிரத்து 690 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.