திருநெல்வேலி

இன்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடர்வதால் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மவாடக்களில் வளிமண்டல சுழற்சி காரணமாகப் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. கடந்த 14-ஆம்  தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்கள் கனமழை வெளுத்து வாங்கியது.

இவ்வாறு 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அங்கு தற்போது மழை ஓய்ந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் சீரமைப்பு பணிகள் முடிவடையாத காரணத்தினால் இன்று  சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  இன்று நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.