மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 10.989 மற்றும் கேரளாவில் 16,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 10,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 58,63,880 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 261 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,01,833 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 16,379 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 58,63,880 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,61,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 16,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 26,74,166 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 156 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 10,437 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 20,237 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,24,248 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,39,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.