னடா

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைக் கனடாவில் தயாரித்து விற்கும் உரிமையை ஒகுஜென் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டறிந்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்து பிரேசில், பிரிட்டிஷ் உள்ளிட்ட கொரோனா வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.   இவை அனைத்தும் உருமாறிய கொரோனாவின் சமீபத்திய வடிவாகும்.    இந்த ஆய்வு முடிவுகளால் தாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஒகுஜென் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு ஒகுஜென் என்னும் மருந்து நிறுவனம் இயங்கி வருகிறது.   இந்த மருந்து நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் பரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்க உள்ளது.   மேலும் கனடாவிலும் இந்த மருந்தை உற்பத்தி செய்து அளிக்கும் உரிமையை ஒகுஜென் நிறுவனம் பெற்றுள்ளது.

இது குறித்து இந்த நிறுவன இணை நிறுவனர் டாக்டர் சங்கர் முகனூரி, “நாங்கள் அமெரிக்காவிடம் இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க விண்ணப்பித்துள்ளோம்.  இதைப் போல் கனடா நாட்டிலும் விண்ணப்பம் அளித்துள்ளோம்.   இந்த மருந்தைத் தயாரிக்க நாங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 15 மில்லியன் டாலர் அளிக்க உள்ளோம்.

இந்த பணத்தில் முதலில் 10 மில்லியன் டாலரை கோவாக்சின் விற்பனை தொடங்கிய 30 நாட்களில் அளிக்க உளோம்.   மொத்தம் 15 மில்லியன் டாலரைத் தவிர கனடா நாட்டு விற்பனையில் வரும் லாபத்தை பாரத் பயோடெக் உடன் பகிர உள்ளோம்.  நாங்கள் கனடாவில் நடக்கும் விற்பனையில் 45% லாபத்தை எங்கள் பங்காக எடுத்துக் கொள்ள உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.