பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 10,959 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 8,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 10,959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,28,248 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 192 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 32,291 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,246 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,80,411 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,15,525 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,79,773 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 67 பேர் உயிர் இழந்து இதுவரை 11,696 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 12,292 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,64,082 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,03,995 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.