சென்னை:
மிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.
தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20 பேர் அடங்கிய, பேரிடர் மேலாண்மை ஆலோ சனைக் குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏரிகள் குளங்கள்  நிரம்பின.  இதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
தொடர்ந்து மழை பெய்ததால், செப்பரம்பாக்கம் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர்  முன் அறிவிப்பின்றி  திறந்து விடப்பட்டதால், சென்னையின் பல  பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதன் காரணமாக பலத்த உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூறிய தலைமை நீதிபதி கவுல், ‘ஆறு ஆண்டுகள் முடிந்தும், பேரிடர் மேலாண்மை திட்டம், இன்னும் நகல் வடிவில் தான் உள்ளது; திட்டத்தை முன்கூட்டியே வகுத்திருந்தால், சென்னையில் ஏற்பட்டிருந்த  வெள்ள சேதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்’ என கருத்து தெரிவித்திருந்தார்.
flood
இந்நிலையில், இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வழக்றிஞர்  பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணையை நீதிபதிகளிடம் வழங்கினார்.
தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் சத்யகோபால் தலைமையில், 20 பேர் அடங்கிய பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைத்ததற்கான அரசாணை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு  முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய, அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியிருப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை திட்டத்தையும், ஆலோசனைக் குழு நியமனம் தொடர்பான  அரசாணையையும்,  தாக்கல் செய்துள்ளார். ஒரு வாரத்திற்குள், ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்ய, மனுதாரர் மற்றும் அட்வகேட் ஜெனரல் தரப்பில், அவகாசம் கோரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடியாக தேவையான நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும். விசாரணை, நவ., 15க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.