நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஒருவாரமாக முரண்டுபிடித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ‘த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’ என்று மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதினார்.
இதனையடுத்து கத்தியின்றி ரத்தமின்றி நடந்துவந்த அறிக்கை போர் முடிவுக்கு வந்ததாக மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, ‘தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகப் பண்பு’ என்று பதிவிட்டுள்ளார்.
To err is human,to forgive is divine🙏🏻
— Trish (@trishtrashers) November 24, 2023
அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொள்ளும் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா-வின் இந்தப் பதிவை அடுத்து ஆறுதல் அடைந்துள்ளார்.