உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது.

2019 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜென்டினா அணி இதில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

இந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது அர்ஜென்டினா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும் சவுதி அரேபிய அணி மீது பந்தயம் கட்டியவர்கள் $1 க்கு $21 என்ற கணக்கில் பணமழை பொழிகிறது.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே மெஸ்ஸி அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணி இரண்டாவது பாதியில் சறுக்கலை சந்தித்தது.

இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய சவுதி அணி இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றதோடு அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

https://twitter.com/VishalVerma_9/status/1595033068158717952

யாரும் எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்தது அர்ஜென்டினா, சவுதி அரேபிய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாட பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

இதனால் சவுதி அரேபியாவில் கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து மைதானங்களில் ‘சரக்கு’ விற்க தடைவிதித்ததால் உற்சாகம் இழந்த ரசிகர்கள்…