டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உட்பட 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் அரசியல் வழக்குகளில், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது மற்றும் “அற்பத்தனமான தர்க்கம் மற்றும் பழமையான அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் நீதிமன்றங்களை அவதூறு செய்ய முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினர்.” இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த கடிதம் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வளைதத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“மற்றவர்களைத் தாக்குவதும் கொடுமைப்படுத்துவதும் பழங்கால காங்கிரஸ் கலாச்சாரம் என்றும், அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள், ஆனால் தேசத்திற்கான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் விலகுகிறார்கள்,” அதனால்தான் “140 கோடி இந்தியர்கள் அவர்களை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை,” என்று விமர்சித்து உள்ளார்.
காங்கிரஸ் தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ப்பணிப்பு உணர்வுள்ள நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றபடி நாடு மீதான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து நழுவிக்கொள்கிறது. எனவே, 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.