சென்னை

மிழக நகர்ப்புற வாழ்விட மேலாண்மை குடியிருப்புக்கள் பெண்களை தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.   இதையொட்டி திமுக் மகளிர் அணி சார்பில் ஒரு விழா நடத்தப்பட்டது.   இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி, கேரள முன்னாள் அமைச்சர் கே கே ஷலஜா உள்ளிட்ட ப்லர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், “திமுக பெண்கள் முன்னேற்றத்துக்காக பல முயற்சிகள் எடுத்து வருகிறது.   நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 11 மாநகராட்சிகளில் பெண்களுக்கு மேயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் ஊராட்சி அமைப்புக்களில் 380 பெண்கள் தலைவராகி உள்ளனர்.

தமிழக நகர்ப்புற வாழ்விட மேலாண்மை வாரியம் சார்பில் குடியிருப்புக்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இனி பெண்களைக்  தலைவர்களாகக் கொண்ட  குடும்பங்களுக்கு அந்தக் குடியிருப்புக்கள் ஒதுக்கீட்டு செய்யப்படும்.  மேலும்  திமுக மகளிர் அணிக்கு என அமைக்கப்பட்டுள்ள இணைய தளத்தை நான் துவக்கி வைத்துள்ளேன்” எனத் அறிவித்தார்.

திமுக மகளிர் அணி செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்வர் ஸ்டாலின் அமைத்து வரும் திட்டங்களுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்  பெண்களின் முன்னேற்றம் குறித்து திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களுக்கு நெட்டிசனகள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.