சென்னை:

மிழகத்தில் நாளை  டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6,491 காலிப் பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4  தேர்வை நடத்துகிறது.

கடந்த 2018ம் ஆண்டு முதல் குரூப்-4 தேர்வு நடைபெறாத நிலையில், தற்போது, 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் நாளை தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு  சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3ஆயிரத் துக்கும்  மேற்பட்ட மையங்களில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு மையத்துக்கு பேனா மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்பட்டு உள்ளது.

பணியிட விவரங்கள்:

கிராம நிர்வாகம்  397 காலி பணியிடங்கள்

இளநிலை உதவியாளர்  2688 காலி பணியிடங்கள்,

இளநிலை உதவியாளர் (பிணையம்) 104 காலி பணியிடங்கள்,

வரி தண்டலர்- நிலை -139 காலி பணியிடங்கள்,

நில அளவையாளர் 509 காலி பணியிடங்கள்,

வரைவாளர் 74 காலி பணியிடங்கள்

தட்டச்சர் 1901 பணியிடங்கள்

சுருக்கெத்து தட்டச்சர்  784 பணியிடங்கள்

மொத்தம் 6491 பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படுபவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19500 லிருந்து ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800 லிருந்து ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.