சென்னை:

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தவறு என்பது நிரூபிக்கப்பட்டதால், குரூப்-1 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இந்த  தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தவறு என்று சுட்டிக்காட்டி, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று  விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின்போது,  தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக  டிஎன்பிஎஸ்சி ஒத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து விரிவான விளக்கமும் நீதிமன்றத்தில் அளித்தது. அதில், தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு முடிவடைந்தாக அறிவித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது.