சென்னை:
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கு 35 ஆயிரத்து 256 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு தாள் ஒன்று, தேர்வு தாள் இரண்டு என இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு தாள் ஒன்றில் புள்ளியியல், கணிதத்தை கொண்டு கேள்விகள் கேட்கப்படும். தேர்வு தாள் இரண்டில் தமிழ் தகுதி தேர்வு உள்ளிட்ட பொது கேள்விகள் கேட்கப்படும் என தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.