சென்னை: ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முலம் நிரப்பப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணிகளுக்கு மட்டுமே இதுவரை தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில், இனிமேல்  ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  சமீபத்தில் 2024ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20-ம் தேதி வெளியிட்டது.

இந்த நிலையில், முதன்முறையாக அரசு பொதுத்துறை நிறுவனங்களான  ஆவின், மின்சார வாரியம் உள்பட தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள்  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன.