தமிழக தேர்தல்ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

Must read

சென்னை:

மிழக தேர்தல் ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ்-ஐ தமிழக அரசு நியமினம் செய்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

தற்போதைய தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் பதவி க ஏற்றார். அவரது பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய ஆணையராக  பழனிச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.  இவர்  2011ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்.

இவரது தலைமையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கின்  விசாரணையின்போது  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மே 31ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பழனிச்சாமி ஐஏஎஸ்

இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையர் பதவி ஏற்ற நிலையில்  உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

More articles

Latest article