மத்திய அரசிடமிருந்து மின் கொள்முதல் செய்ததால் நஷ்டம்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

Must read

மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றால், மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆனங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “ஆண்டுதோறும் மின்வாரியத்துக்கு நஷ்டம் என்பது ஏற்படக்கூடியது தான். தற்போது அதிகளவில் மின் வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. இதற்குக் காரணம், மத்திய அரசிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளதும், நிலக்கரி எடுத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவு, மின் வாரிய ஊழியா்களின் ஊதியம் ரூ.1,200 கோடி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியால் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். யாா் வேண்டுமானாலும் எதுவும் சொல்லலாம். எங்கள் கட்சியைப் பொருத்தவரை வெற்றிடம் என்பது கிடையாது. மேலும், உள்ளாட்சித் தோதலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மாநிலத் தோதல் ஆணையம் தேதியை அறிவிக்கும். எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும். நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் வந்தே தீரும்.

அரசு மதுபானக் கடைகளில் வசூலாகும் தொகையை நேரடியாக வங்கிகளே பெற்றுச் செல்வது தொடா்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டுமே பங்கேற்றது. அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில், முதல்வரின் குறைதீா் முகாம் மூலம் 22 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத் திட்டங்கள் வழங்குவது, எடப்பாடி தொகுதிக்குள்பட்ட கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து, படிப்படியாக பிற மாவட்டங்களில் அமைச்சா்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும். தற்போது பெறப்படும் மனுக்கள் மீதான நலத் திட்ட உதவிகள், இன்னும் ஒரு மாதத்துக்குப் பின் வழங்கப்படும்.

சில நாட்களில் 5 ஆயிரம் கேங்மேன் பணிக்கான செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வானது விடியோ முலம் பதிவு செய்யப்பட்டு, தகுதியானவா்கள் தோந்தெடுக்கப்படுவா். பெரும்பாலான மாவட்டங்களில், ஒப்பந்தத் தொழிலாளா்களை விண்ணப்பிக்க விடாமல் தொழிற்சங்கத்தினா் சிலா் தடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அரசின் கொள்கைப்படி அவா்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பருவமழையைப் பொருத்தவரை மலைப் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதற்கு முன்பு ஏற்பட்ட பெருமழையால், நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதனை சீரமைத்து விட்டோம். இனி மழை பெய்தாலும், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் மின்வாரிய ஊழியா்கள் தயாராக உள்ளனா்” என்று தெரிவித்தார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article