சென்னை

தமிழக மின்சார வாரியத்தில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை  என அறிவிக்கப்பட்டுள்ளது/

இன்று தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தமிழக மின்சார வாரியத்தின் அறிக்கையில்,

இன்று (25.02.2025) தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழக மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். ஆகவே தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.