பிபின் ராவத் மறைவுக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி

Must read

சென்னை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி செலுத்தி உள்ளது.

நேற்று பிற்பகல் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.   அந்த ஹெலிகாப்டர் விமானம் குன்னூரில் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகளுக்கு மரணம் அடைந்தனர்.   இன்று உடற்கூறாய்வுக்கு பிறகு அவர்கள் உடல்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டன.   

பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிடோர் மரணத்துக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.   தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மறைந்த பிபின் ராவத் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article