சென்னை:
இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு தெரிவித்து உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு 253 பேர் பலியான நிலையில், குண்டு வெடிப்பை நடத்தியதுதான் நாங்கள்தான் என்று ஐஸ் பயங்கர வாத இயக்கம் பொறுப்பேற்றது. இதையடுத்து, அந்த அமைப்புக்கு உதவி செய்த தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இலங்கை அரசு தடை விதித்தும், அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளையும் முடக்கி உள்ளது.
மேலும், நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத் துவதற்கு தடையாக அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகள், நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்படுவதாக செய்யப்படுவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு இலங்கையின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது.
சென்னை சேப்பாகத்தில் இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்காரவாத அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ரகீம் தெரிவித்து உள்ளார்.
மேலும், முகத்தை மூட வேண்டும் என்று இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை என்றவர், இலங்கை அரசு புர்கா அணிய தடை விதித்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்து உள்ளார். ஒருசில மீடியாக்கள் இலங்கை குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.