சென்னை:

எஸ்.சி. / எஸ்.டி. குற்றங்கள் தொடர்பான  விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எஸ்சி, எஸ்டி மக்கள் மீது சாதி ரீதியாக வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் இந்த சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு இதில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில், அரசு ஊழியர்கள் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குதொடரப்பட்டால் சம்பந்தப்பட்டவரை மேலதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என தலித் அமைப்புகள், அரசியல் கட்சிகள் நாடு முழுவது போராட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ஆர்ட்டிகிள் 14, 19, 21 ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.

வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில், எஸ்.சி. / எஸ்.ஆர்.டி. குற்றங்களின் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்  உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2015ம் அண்டு சஞ்சயன் கிஷன் கவுல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபற்றது. அதைத்தொடர்ந்து,  தமிழகத்தில் 2016-17ம் ஆண்டே 4 கட்டங்களாக  16 நீதிமன்றங்கள்  அமைக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.

அதன்படி முதல்கட்டமாக 4 இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன., இந்த நிலையில் 4 நீதிமன்றங்களில் திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை 3 சிறப்பு நீதிமன்றங்கள் பணி முடிவடைந்து இருப்பதாகவும், அதில் கடந்த  ஏப்ரல் 24 ம் தேதி முதல் பணிகள் தொடங்கலாம் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும்  நீதிபதிகள் எஸ்.மணி குமார் மற்றும் சுப்பிரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

முதல்கட்டமாக 4 நீதிமன்றங்கள் திறக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் (ஆர் ஜி), பதில் அளிக்க வேண்டும் என்றும், இது குறித்து மாவட்டங்களின் நீதிபதிகளிடம் இருந்து ‘தயார்நிலை அறிக்கை’  பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் விரைவில் எஸ்சி, எஸ்டி  சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளது.