‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத காரணத்தால் வெளியான இரண்டே நாளில் பெட்டிக்குள் திரும்பியது.

இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது “எதிர்பார்த்த வசூல் இல்லாததால் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான மறுநாளே திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கூறப்படுவதை அடுத்து திரையரங்கு மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி இந்தப் படம் ஞாயிறு முதல் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, “இந்தப் படத்தை திரையிடாமல் இருப்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாததால் ஆளும் திமுக அரசின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு தடை செய்துள்ளனர்.

இந்தப் படத்தை வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார்.