சென்னை
தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பணி புரிந்து வந்தார். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையொட்டி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 6.5 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் ரொக்கம், ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன்.
அதையொட்டி அவர் பதவியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்களுக்கான கணக்குகள் ஏதும் இல்லாததால் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்லம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் நடந்த சோதனையில் மேலும் தங்கம், மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.