சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் நபர்களை காவல்துறையைக்கொண்டு நள்ளிரவு கைது செய்யப்படும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் நள்ளிரவில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்  சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறத. இந்த விவகாரத்தில் அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, நள்ளிரவு கைது செய்யப்பட்டு உள்ளார்.  நேற்று தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை  நள்ளிரவு 3மணி அளவில் கோவை சைபர் கிரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து  கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் நள்ளிரவு கைது நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கர் கைது ஏன்?

தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர்.  குறிப்பாக திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் திமுக அரசு சவுக்கு சங்கரை திட்டமிட்டு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறத. ஏற்கனவே திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததால், சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரை ஒவ்வொரு சிறையாக மாற்றி, இறுதியில் கடலூர் சிறையில் அடைத்து காவல்துறையினர் கொடுமை படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இநத் நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஜனவரி 26ம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு கார்களில் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றார். இதுதொடர்பாக,   சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் அதிரடியாக வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது .அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காக பதிவு செய்து, அவரை கைது செய்ய தீர்மானித்தது.

ஆனால், தேர்தல் காரணமாக அவரை கைது செய்வதை திமுக அரசு காலம் தாழ்த்தியது. இதற்கிடையில், சவுக்கு சங்கர் தமிழக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில், அவரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.   தேனியில் இருந்த சவுக்கு சங்கரை  நள்ளிரவு கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

சவுக்கு சங்கர் யுடியூபர் மட்டுமின்றி சவுக்கு மீடியா என்ற பெயரில் செய்தி சேனலையும் நடத்தி வருகிறார். அவர் திமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையு கூறி விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக,   சவுக்கு சங்கர் ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்களை,. காவல்துறையினரைக் கொண்ட திமுக அரசு மிரட்டி வருவதாகவும், சிலரை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி.ன இதுதொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவுக்கு சங்கருக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்திருத்திருந்தார்.

அதில்,  திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு முதல்வரை வலியுறுத்துவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: காவல்துறை அதிகாரிகள் சங்கர் ஜிவால், டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது  சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? கோபாலபுரம் வீட்டில் வைக்கலாமே! சவுக்கு சங்கர் காட்டம்!