தமிழகத்தில் 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பரிசோதனை

Must read

சென்னை

மிழகத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

எனவே தனிமைப்படுத்தல், பரிசோதனை மற்றும் தனிமைப் படுத்தல் மட்டுமே தடுப்புக்கு முக்கிய வழியாகும்.

தற்போது  ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று மட்டும் 7093 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை மொத்தம் 1,01,874 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதில் 2058 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ள்து.

அதாவது பரிசோதனை செய்யப்பட்டோரில் 2.02% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article