சென்னை
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. வழக்கமாக ஜனவரி 2 ஆம் வாரம் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சர்களுடன் நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டம் நடத்துகிறார். வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த வருடச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கையில் ஏராளமான சலுகை அறிவிப்புக்கள் இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. நாளைய அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம், சசிகலா விடுதலை, கூட்டணி, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு என பலவும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.