அமராவதி:

மிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட வலியுறுத்தி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தமிழகம் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

தமிழகத்தில் போதிய அளவு பவருவமழை பொய்த்து போனதால், சென்னைக்கு தண்ணீர் தரும் அனைத்து ஏரிகளும் வறண்டு விட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீரும் தமிழகத்திற்கு வரவில்லை. இதையடுத்து,  தற்போது ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீரை கேட்டு பெறுவதற்காக முதல்வர் எடப்பாடியின் ஆலோசனையின் பேரில், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை ஆந்திரா சென்று, அங்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள்.