ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக்கை ஆக.23 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

Must read

சென்னை:

ர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆக. 23-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றசாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலன் அடைந்ததாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தங்களை கைது செய்ய தடை கேட்டு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து, அவர்களை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இன்றைய விசாரணையை தொடர்ந்து, தடை ஆகஸ்டு 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article