சென்னை:

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி  நக்கீரன் வேண்டுமென்றே , நீதிமன்ற உத்தரவு கீழ்ப்படியாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது, அவர்மீது நீதிமன்ற வழக்கு  தொடர வேண்டும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி வரும் சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர் களுக்கு தொடர்பு என்ற பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

முன்னதாக சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளன்  ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அந்த கடத்தல் சம்பவத்திலிருந்து தப்பிக்க வைக்க முயற்சிக்கும் வகையில், வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. காதர்பாஷா  மீது  பொன். மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்தார்.

இதை எதிர்த்து, தன் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கு என காதர் பாஷா, காவல்துறை மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததுடன். “என் மீது பொய் வழக்குப் போட்டு தீன தயாளனை தப்பிக்க வைக்க பொன்.மாணிக்கவேல் முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் (ஜூலை) 25ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இது, தொடர்பாக விசாரிக்க  ஊடகங்களுக்கு நீதிமன்றம்  தடை செய்தது. ஆனால்,  ஜூலை 29 தேதியிட்ட நக்கீரன்  பத்திரிகையின் பதிப்பில்  சிலை திருட்டு வழக்குகளில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டதாக ஒரு செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் சில அமைச்சர்களின் பெயர்களை வெளிப்படுத்தியது, இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த கட்டுரை வெளியிடப்பட்டதாகக் கூறி, கோபால் மற்றும் கட்டுரை எழுதிய நிருபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் தொடங்க வேண்டும் என்று சட்ட அமைச்ர் சண்முகம் மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.