சென்னை
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இன்று தமிழக ஆளுநர் தாம் எக்காலத்திலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒப்புதல் கையெழுத்து இடப்போவதில்லை எனவும் தாம் நீட் தேர்வை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநர் இவ்வாறு தெரிவித்தது தமிழகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா இது குறித்து செய்தியாளர்களிடம்,
முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வின் கொடுமைகள் குறித்துத் தெளிவாக எடுத்துக்கூறியும், ஆளுநர் இப்படி முடிவு எடுக்கிறார். ஆளுநர் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதைப் போல, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையிலும், படிப்பிலும் அரசியல் செய்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
எனக் கூறியுள்ளார்.