குடிமகன்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள அதிர்ச்சி : விலை ஏற்றம்

Must read

சென்னை

மிழக அரசு மது பானத்தின் மீதான ஆயத்தீர்வை வரியை அதிகப்படுத்தியதால் இன்று முதல் விலை உயர்ந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.  இதனால் மது பிரியர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர்.  தற்போதைய மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசின் அறிவுரைப்படி தமிழக அரசு விதிகளைத் தளர்த்தி உள்ளது.

அவ்வகையில் தமிழகத்தில் அதிக பாதிப்புள்ள சென்னை நகர் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இதனால் குடிமகன்கள் கொண்டாட்டமாக உள்ளனர்.   ஆனால் அவர்களுக்கு டாஸ்மாக் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.

டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மது பானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத் தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளதால் சாதாரண வகை 180 மிலி மது பாட்டில் விலை ரூ.10 கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரிமியம் வகை 180 மிலி மது பாட்டில் விலை ரூ.20 கூடுதலாகவும் 07.05.220 முதல் உயர்த்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article