சென்னை:

டிக் டாக் செயலியை தடை நடவடிக்கை மத்தியஅரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறி உள்ளார்.

மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப் படுத்துவதற்காக டிக்டாக் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்த செயலி  ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது.  சொந்த வாழ்க்கை யையும், சமூகத்தையும் சீரழிக்கும்  குற்ற உணர்ச்சி இல்லாமல் பலர் இந்த செயலிக்கு அடிமையாக இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக  இன்று தமிழக சட்டபேரவையில்  பேசிய எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி டிக்டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், புளூ வேல் விளையாட்டை எப்படி மத்திய அரசு மூலம் தடை செய்யப்பட்டதோ, அதேபோல டிக் டாக் செயலியும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், . அதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனக் கூறினார்.