சென்னை

மிழக அரசு டென்மார்க் உதவியுடன் 1000 கோடி டாலர் செலவில் ஒரு பசுமை சக்தி தீவு அமைக்க உள்ளது.

தமிழக அரசு பசுமை சக்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நாட்டில் அதிக அளவில் காற்றாலை மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி நடக்கிறது.  இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 14% தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது.  இதை மேலும் அதிகரிக்கத் தமிழகம் திட்டமிட்டுள்ளது.  இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நீண்ட கடற்கரை உள்ளது.  எனவே இங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும்.   ஏற்கனவே டென்மார்க் நாட்டில் இது போலக் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் அதிக அளவில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.  டென்மார்க் நாடு தமிழகத்தில் இவ்வாறு மரபு சாரா  சக்தி உற்பத்திய்ல் தமிழகத்துக்கு உதவ முன் வந்துள்ளது.

இது குறித்து டென்மார்க் நாட்டின் மின்சார்த்துறை அமைச்சர் ஜானிக் ஜோர்சென் தலைமையில் தமிழகம் வந்துள்ள குழுவினர் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.  அப்போது பசுமை சக்தி தீவு ஒன்றை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.  டென்மார்க் நாட்டில் உள்ளது போல மிதக்கும் காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மின் தகடுகள் அங்கு அமைக்கப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

இதற்காக மொத்தம் 1000 கோடி டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த திட்டம் டென்மார்க் மற்றும் தமிழக அரசு பங்கீட்டுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் டென்மார்க் நாட்டின் பல புகழ் பெற்ற நிறுவனங்கள் பங்கு  பெற உள்ளன.  தவிர டென்மார்க் நாட்டில் உள்ள இந்திய நிறுவனங்களும் பங்கு பெறும்  எனக் கூறப்படுகிறது.