சென்னை

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராவோர்களுக்காக தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புக்களை நடத்த உள்ளது.

தமிழகத்தில் உள்ள மாணவர்களில் பலர் ரயில்வே, வங்கி, மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களின் நலனை மனதில் கொண்டு தமிழக அரசு இந்த தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடத்த உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புக்கள் வரும் 25.5.2003 முதல் தொடங்க உள்ளன. இந்த வகுப்புக்களில் சேர விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.5.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

அறிவிப்பு: https://naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf…

விண்ணப்பம்: http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX… .

இந்த பயிற்சி வகுப்புக்களில் வகுப்புக்கள் 300 மணி நேரம் நடக்க உள்ளன. இதில் வழி காட்டுதல், பயிற்சி தேர்வுகள் உள்ளடங்கி உள்ளன. இந்த பயிற்சியில் பாடநூல்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.