சென்னை

டகத் துறையினர் தங்களுடைய அடையாள அட்டையைக் காட்டி தமிழகம் முழுவதும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றார்.  தமிழகத்தில் செய்தித்தாள் உள்ளிட்ட அனைத்து  ஊடகத்துறையினரும் இனி முன்களப் பணியாளராக அறியப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது

தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ ரெஜிஸ்டிரேஷன் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இதனால் செய்தித்தாள் மற்றும் ஊடகத்துறையினர் தங்கள் பணிகளைச் செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

 இதையொட்டி தமிழகக் காவல்துறைத் தலைவர் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.  அதில், “அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடக செய்தியாளர்கள் தங்களது அலுவல் அடையாள அட்டை/செய்தியாளர் உரிமை அட்டை/பிரஸ் கிளப்  அடையாள அட்டையை காட்டி மாநிலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.  இவர்களுக்கு இ பாஸ் உள்ளிட்டவை தேவை இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.