சென்னை: கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைத்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக யுஜிசி உறுப்பினர் சசிகலா வாஞ்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அரசின் பிரதிநியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் பி.தனபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆளுநர் வலியுறுத்தி வந்தபடி, வேந்தரின் பிரதிநிதி இடம்பெற வேண்டும்.
தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அதை கண்டுகொள்ளாமல் தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை வெளியிட்டு உள்ளது.