சென்னை
தமிழக அர்சு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி விரைவில் தாம்பரம் மாநகராட்சியாக் உயர்த்தப்படும் எனவும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தமபரம் மாநகராட்சியில் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி தாம்பரம் மாகராட்சி அமைப்பு குரித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மூலம் புதிய மாநகாரட்சிக்கான எல்லையை வரையறை செய்வது, அனைத்து ஆவணங்களை உருவக்குவது போன்ற பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.
இந்த மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்துர்ர் ஆகிய நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 8764 ச்துர கிமீ ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியின் மக்கள் தொகை தற்போதைய நிலவரப்படி 9,60,867 ஆக இருக்கும் என கூறப்படுகிற்து.