சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான டோக்கன் வரும் 16ந்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு,  இழப்பீட்டுத் தொகையாக 5 இலட்சம்

சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிம்,

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 22,500 ரூபாய். –

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8,500 ரூபாய்

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 ரூபாய்

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4,000 ரூபாய்

மீனவர்களுக்கு முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட 50 ஆயிரம் ரூபாய்,

பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்

முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை 1 இலட்சம் ரூபாயாகவும்,

சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 7.50 இலட்சம்

. சேதமடைந்த வலைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை  விரைவில்  வழங்கப்பட வாய்ப்பு. அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்க உள்ளது. முன்னதாக, 16ந்தேதி முதல்  டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாடு அரசு. நாளொன்றுக்கு 200 டோக்கன் வீதம் வழங்கவும், நிவாரணத்தொகை முழுவதும் கொடுத்து முடிக்கும் வரை நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை இல்லை. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்தும் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட இருக்கிறது.

,இந்த  நிலையில், தற்போது  இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.