சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி  வந்த  சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  இதனால், சென்னை வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வந்த சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நள்ளிரவில்  தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.  இதனால் சரக்கு ரயிலின்  10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.  இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே துறையினர், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த வந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக,   செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில் அறிவித்து உள்ளது.

மேலும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுவதாகவும், தடம்புரண்ட பெட்டிகளை   சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.