சென்னை

டைபெற உள்ள சுவிட்சர்லாந்து உலக பொருளாதார கூட்டத்தின் மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார வருடாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.   இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சர்வதேச அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது வழக்கமாகும்.

இந்த ஆண்டு வரும் 22-26 தேதிகளில் சுவிட்சர்லாந்தில் வருடாந்திர உலக பொருளாதாரக் கூட்டம் நடைபெறுகிறது.   இந்த கூட்டத்தில் தமிழக  அரசு கலந்துக் கொண்டு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.   அதன்படி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு பங்கேற்க உள்ளது.

ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் முதல்வர் பங்கேற்க முடியாத சூழல் உண்டானால் அவருக்குப் பதிலாகத் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உயர் மட்டக்குழு பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.