தமிழக ஆளுநர் இன்று திடீர் டில்லி பயணம்

Must read

சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை திடீர் என டில்லிக்குச் சென்றுள்ளார்

தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   குறிப்பாக அவர் நீட் தேர்வு மசோதாவைக் கிடப்பில் போட்டது.  வெகு நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பியது,  இந்தியை மாற்று மொழியாக்க ஆதரவு தெரிவிப்பது எனப் பல விதங்களில் அவர் மீது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தி உள்ளது.

வரும் மே 16 ஆம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.  இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி திடீரென டில்லிக்கு இன்று காலை சென்றுள்ளார்

ஆளுநரின் இந்த திடீர் டில்லி பயணம் அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article