டில்லி தீ விபத்தில் 27 பேர் பலி : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Must read

டில்லி

டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் உயிர் இழந்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் முண்டக் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வணிக வ்ளாக கட்டிடம் அமைந்துள்ளது.  நேற்று மாலை 4.40 மணி அளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயை அணைக்க 24 தீயணைப்பு வாகனங்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.  இந்த வளாகம் 2 அடுக்கு கொண்டதாகும்.

இங்கு இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   மேலும் 60-70 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 40 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.  உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.  , விபத்து நேர்ந்தபோது கட்டிடத்தின் 2வது தளத்தில் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது.  முதல் தளத்திலேயே அதிக உயிரிழப்பும் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டில்லிதி விபத்தில் பலர் உயிர் இழந்துள்ளது தமக்கு மிகவும் வேதனை அளிப்பதாக வருட்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article