சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமாகும். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. . இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்:
தமிழக அரசு மாநில மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 2022ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, பெண்கள் உயர்கல்வி பெற வழி வகை செய்துள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியது. புதுமைப் பெண் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்குகிறது மற்றும் புதிய மாணவர் பதிவுகளை கவனித்துக்கொள்கிறது.
புதுமைப் பென் திட்டம் அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பண உதவி வழங்குகிறது . இது பெண் மாணவர்களின் பொது நல்வாழ்வை மேம்படுத்துவதையும், அவர்கள் படிப்பைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக தங்கள் மகள்களைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாத பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு இது நிதி உதவி வழங்குகிறது.
இந்த நிலையில், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 – 12 வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
பட்டயம், தொழிற்படிப்பு படிக்கும் திருநங்கை, திருநம்பிகள், இடைபாலினர்கள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.