சென்னை

மிழ்க அரசு கொரோனா தொற்றை வைத்து கொள்ளை அடித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.  ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

அவ்வகையில் சென்னை அருகில் உள்ள மதுரவாயல் பகுதியில் உள்ள அடையாளம்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திமுக சார்பில் நடந்தது.  இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின்கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர், “மத்தியிலும் மாநிலத்திலும் விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு எல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு பிரதமரும் தமிழக முதல்வரும் போட்டுக் கொள்ளவில்லை.  கொரோனா தடுப்பூசி சோதனையை அரசு மக்களை வைத்துச் செய்து வருகிறது.  இந்த கொரோனா தொற்றை வைத்து தமிழக அரசு மக்களைக் கொள்ளை அடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.