சென்னை
தமிழக அரசு பர்வத மலை ஏற புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
தமிழகத்தில் தென் கைலாயம் என அழைக்கப்படும் நந்தி வடிவமான 4,560 அடி உயர பர்வதமலை அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் படிக்கட்டுகள் கரடு முரடான பாதைகள், ஏணி படி, ஆகாய படி, பாறைகள் ஆகியவற்றை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் சில நேரங்களில் முதியவர்கள், ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், உடல்நல குறைவால் மலை உச்சிக்கு செல்லும்போது மூச்சு திணறல் காரணமாக பலியாகின்றனர்.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மலையேற கட்டுப்பாடுகள் விதித்து இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் பச்சையம்மன் கோயில் மலை அடிவாரம் வீரபத்திரன் கோயில் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பலகையில்ம்
“பக்தர்களின் பாதுகாப்பு கருதி 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை மீது ஏற அனுமதி இல்லை. மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் மலை பயணத்தினை தவிர்க்கவேண்டும்”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.