சென்னை

மிழக அரசு முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.   இதை உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.  தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1000 ரூபாய்க்குப் பதிலாக ரூ.1200 ஆக உயர்த்த ஆலோசனை நடந்தது.  முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இந்த ஆலோசனைக்கு ஒப்புதல் அளி9துள்ளது.   வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   ஏற்கனவே உதவித் தொகை பெறுவதற்காக காத்திருப்போருக்குத் தகுதி அடிப்படையில் உதவித் தொகை வழங்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.