சென்னை: கொரோனா கண்காணிப்பு பணிக்கு முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பூர்ணலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம்தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் சுகாதாரத்துறை செயர் திரு ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் கோவிட் தடுப்பு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக, பி.குகானந்தம், டி,குழந்தைசாமி, டி.மனோஜ் முர்கேகர், டாக்டர் ஜெயபிரகாஷ் முலையில் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அரியலூர் மாவட்டம் – ரமேஷ்சந்த் மீனா
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் – சி.சமயமூர்த்தி;
கோவை மாவட்டம் – என்.முருகானந்தம்;
கடலூர் – சந்திரகாந்த் பி.காம்ப்ளே; தர்மபுரி – அதுல் ஆனந்த்; தி
திண்டுக்கல் – மங்கத்ராம் சர்மா;
ஈரோடு, திருப்பூர் – கே.கோபால்;
காஞ்சீபுரம் – எல்.சுப்பிரமணியன்;
கன்னியாகுமரி – பி.ஜோதி நிர்மலாசாமி;
கரூர் – சி.விஜயராஜ் குமார்;
கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்;
மதுரை மற்றும் விருதுநகர் – பி.சந்திரமோகன்;
நாகை மற்றும் மயிலாடுதுறை – எம்.சாய்குமார்;
நாமக்கல் – தயானந்த் கட்டாரியா;
நீலகிரி – சுப்ரியா சாகு;
பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்;
புதுக்கோட்டை – ஷம்பு கல்லோலிகர்; ரா
மநாதபுரம் – தர்மேந்திர பிரதாப் யாதவ்;
ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை – ஜி.லட்சுமி பிரியா;
சேலம் – நசிமுத்தீன்;
சிவகங்கை – டி.கார்த்திகேயன்;
தென்காசி – சுன்சோங்கம் ஜடக் சிரு;
தஞ்சாவூர் – மைதிலி கே.ராஜேந்திரன்;
தேனி – ஏ.கார்த்திக்;
தூத்துக்குடி – குமார் ஜெயந்த்;
திருச்சி – ரீட்டா ஹரீஷ் தாக்கர்;
நெல்லை – அபூர்வா;
திருப்பத்தூர் – டி.எஸ்.ஜவஹர்;
வேலூர் – எஸ்.சுவர்ணா;
திருவள்ளூர் – கே.பாஸ்கரன்;
திருவாரூர் – ஆர்.கிர்லோஷ்குமார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.