சென்னை: மனிதர்களை பலிவாங்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது விலங்குகளிடமும் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒரு சிங்கம் எந்தவித அறிகுறியும் இல்லாமல் நேற்று (3ந்தேதி) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளையும், உலக மக்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ள கொரோனா எனப்படும் பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று இதுவரை மனிதர்களை மட்டுமே தாக்கிய நிலையில், சமீப காலமாக விலங்குகள் மீது பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள வனஉயிரியில் பூங்காவான,  வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது என பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக,  வண்டலூர் பூங்காவும் இடையிடையே திறக்கப்பட்டும் மூடப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களே, அங்கு விலங்குகளை பாதுகாத்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று 2-ம் அலை காரணமாக கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல், க வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் பசியின்மை. சளி தொந்தரவு இருந்ததால் அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.