திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கூட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மதுவிலக்குத் துறை துணை ஆணையர் இதற்கான சிறப்பு அனுமதியை வழங்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கட்டண விவரங்களுடன் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அரசிதழை வெளியிட்டுள்ளார்.