சென்னை

மிழக அரசு 3000 புதிய பேருந்துகள் கொள்முதலுக்கான விலைப்புள்ளி கோரி உள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கத் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருந்தது. எனவே அதற்கான விலைப்புள்ளி  கோரி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது 1,190 மாநகர பேருந்துகள், 672 மாநகர தாழ்வு தள பேருந்துகள், 1,138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3,000 பேருந்துகள் வாங்க விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ள காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக வரும் நிதியாண்டில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் எனப் போக்குவரத்துத் துறை செயலாளர் பணிந்தாரா ரெட்டி தெரிவித்துள்ளார்.